மாய இரத்தம்
தேவை : மஞ்சள் தூள்,வெள்ளைத்தாள்,சுண்ணாம்புத் தூள்,தண்ணீர்.
செய்முறை : உங்கள் நண்பரிடம் மாயாஞாலம் செய்து காட்டும் முன்னே மஞ்சள் தூளை தண்ணீருடன் கலந்து வெள்ளைத்தாளின் மீது தடவவேன்டும். தாள் மஞ்சள் தாளாகி விடும்.
அதே போல் சுண்ணாம்புத் தூளை தண்ணீரில் கலந்து கையில் தடவிக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த மங்களகரமான மஞ்சள் தாளிலிருந்து இரத்தம் வரவழைக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு மந்திரம் போடுவது போல் கையை தாளின் மீது வைக்க வேண்டும். உடனே சிவப்பு நிறம் உண்டாகும் அதை இரத்தம் என்று சொல்ல வேண்டும்.
எச்சரிக்கை : கையில் சுண்ணாம்புத் தூள் தடவியிருப்பது யாருக்கும் தெரியக் கூடாது.

0 Comments:
Post a Comment
<< Home