கண்ணால் வெட்டப்பட்ட வாழைப்பழம்.
தேவை : வாழைப்பழம், ஊசி.
செய்முறை : ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதை ஊசியால் சரியாக நடுப்பக்கத்தை சுற்றி குத்த வேண்டும். (அல்லது நீண்ட ஊசி ஒன்றை எடுத்து பழத்தின் நடுப்பகுதியில் நுழைத்து அதன் பின்புறத்தை மெதுவாக அசைத்து பழத்தை வெட்ட வேண்டும்.) ஊசியை எடுத்த பிறகு பார்வையாளர்களை அழைத்து "நான் இப்பொழுது கண்களால் இந்த வாழைப்பழத்தை வெட்டப்போகிறேன்" என்று சொல்லி வாழைப்பழத்தோலை உரிக்க வேண்டும். உரிக்கும் பொழுதே பார்வையாளர்களிடம் 'என் கண்களைப் பாருங்கள் - இதோ கத்தி போல் கூர்மையாகிறது - பழத்தை வெட்டப்போகிறது' என்று கூறிக்கொண்டே வாழைப்பழத்தோலை உரிக்க வேண்டும் வாழைப்பழத்தோலை உரித்த உடன் வாழைப்பழம் கீழே விழும். இதைக் கண்ட பார்வையாளர்கள் வியப்படைவார்கள்.
.. சின்னப்பையன்
எழுமிச்சை இரத்தம்.
தேவை : எழுமிச்சம் பழம், சிவப்பு மை (ரெட் இன்க்), கத்தி, ஊசி (சிரின்ஞ்).
செய்முறை : ஒரு எழுமிச்சம் பழத்தை எடுத்து அதில் சிவப்பு மையை ஊசி மூலம் உள்ளே செலுத்த வேண்டும்.பிறகு பார்வையாளர்களை அழைத்து " நான் இப்பொழுது எழுமிச்சம் பழத்தின் இரத்தத்தை காட்டப்போகிறேன்" என்று சொல்லி மந்திரம் போடுவது போல் கத்தியால் எழுமிச்சம் பழத்தை வெட்ட வேண்டும். எழுமிச்சம் பழத்தில் இருந்து சிவப்பு மை வரும் இதைக் கண்ட பார்வையாளர்கள் இரத்தம் என்று நினைத்து வியப்படைவார்கள்.